வணக்கம் அன்புத்தமிழ் உறவுகளே,
தாண்டவன்வெளி மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் திரு.நிறஞ்சன் அவர்கள், 23.09.2024 அன்று, உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்து
மட்டு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் இருந்தவர் ஓரளவுக்கு குணமாகிய போதும், இன்னொருவரது உதவியின்றி இயங்க முடியாதவராக இருக்கின்றார்.
மிகவும் இக்கட்டான சூழலுக்கு முகம் கொடுத்துள்ள இக்குடும்பத்துக்கு, உதயம் உதவ முன்வந்ததுடன், உறவுகளாகிய உங்களிடமும் உதவியை நாடியிருந்தோம்.
நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி இக்குடும்பத்துக்கான சுயதொழிலை ஊக்குவித்து , யாருடைய உதவியையும் இவர்கள் நாடாமல் சுயமாக வாழும் வகையில் உணவு விற்பனை நிலையத்தை நாம் அமைத்து வந்ததை நீங்கள் அறிவீர்கள். கட்டுமான பணிகள் நிறைவுபெற்று மேலதிக மூலப்பொருட்களையும் வழங்கியுள்ளோடு, இன்றையதினம் கடைத் திறப்பு விழாவும் சிறப்பாக நடந்தேறியுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
இத்திட்டத்துக்காக 333.937,00 ரூபா மொத்தமாக செலவாகி உள்ளது. இவ்வேலைத் திட்டத்துக்கான நிதியானது உதயம் பணியாளர்கள், கலைஞர்கள், அனுசரனையாளர்கள் மற்றும் உறவுகளின் ஆதரவால் கிடைக்கப் பெற்றது. கரம்கொடுத்த உறவுகள் அனைவருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
உறவுகளுக்கு உதவ விரும்புபவர்கள் உதயத்தை தொடர்பு கொள்ளுங்கள்,
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 004915733957835
நன்றி.
Leave a Comment