யேர்மனி ருத்தன் (Rüthen) நகரில் வாழ்ந்துவந்த திரு. தவராசா பொன்னம்பலம் அவர்கள் 31.03.2025 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார்.
அன்னாரது 31 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் அவரது மனைவி பிள்ளைகள் தாயக உறவுகளுக்கு உணவை வழங்குமாறு எம்மிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, இன்றையதினம் அறிவாலய மாணவர்களுக்கு மதிய உணவையும், ஆதரவற்ற முதியவர்கள் 10 பேருக்கு உலர் உணவையும் வழங்கி வைத்துள்ளோம்.
அன்னாரது குடும்பம் தாயக உறவுகளில் பற்றுக்கொண்டு உதயம் தொண்டு நிறுவனத்தில் எமது உறவுகளுக்காக பணியாற்றுபவர்கள். கணவனை, தந்தையை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்துக்கு இயற்கை மன அமைதியை வழங்க வேண்டும் என அனைத்து உதயம் பணியாளர்களும் வேண்டி நிற்பதோடு,
அமரர். தவராசா பொன்னம்பலம் அவர்களின் ஆத்மா இறையடியில் இளைப்பாற எல்லாம்வல்ல இயற்கையை வேண்டுகிறோம். இச்செயத்திட்டத்துக்காக 85.000 ரூபா நிதியை வழங்கி வைத்துள்ள அவரது மனைவி பிள்ளைகளுக்கு தாயக உறவுகள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இச்செயத்திட்டத்துக்கான நிதியை தாயகத்தில் வழங்கி வைத்துள்ளனர்.
உறவுகளுக்கு உதவ விரும்புபவர்கள் உதயத்தை தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி.