ஒரு உண்மையான மாற்றம்
கட்டிக் கொடுக்க முடியாதவர்களுக்கு வீடு கட்டித் தர முயல்கிறோம், அது எங்களுக்கு சவாலாக உள்ளது.
உதயம் தொண்டுநிறுவனம் என்றால் என்ன?
உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவனமானது யேர்மனியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். தாயக உறவுகளுக்கு குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட 35 வருடகால அழிவுகளால் பாதிக்கப் பட்டு, பொருளாதாரத்தினாலும் உடல் மற்றும் உளஅளவிலும் நலிவுற்றிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் முகமாகத் தொடங்கப்பட்டதாகும்.
உதயம் தொண்டு நிறுவனத்தின் செயற்திட்டங்கள் எத்தகையவை?
மக்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும், சுயதொழிலை ஊக்குவிக்கவும், உளவியல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்கவும் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கூடவே; பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும், பெற்றோரை இழந்த சிறார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும், பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கும், முதியவர்களுக்கும் உதவி வருகின்றோம்.
மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பு, சுயதொழில் ஊக்குவிப்பு, வேளாண் ஊக்குவிப்பு, மருத்துவ மேம்பாடு போன்ற பலவிதமான செயற்திட்டங்களைச் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அனைத்துச் செயற்திட்டங்களும் உதயத்தின் பணியாளர்களால் நன்கு ஆய்வுக்குட்படுத்தி உறுதிப் படுத்திய பின்னரே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உதயம் தனது செயற்திட்டங்களுக்கு எவ்வாறு நிதியை பெற்றுக்கொள்கிறது?
உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்களின் மாதாந்த பங்களிப்பினூடாகவும் , நல்லுள்ளம் கொண்டவர்களின் வழங்கும் நன்கொடைகள், விழாக்கள் பண்டிகைகளில் உணவு விற்பனை செய்வதன் மூலமும், விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழாக்களை நடாத்துவனூடாகவும், மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் எமது மக்களின் தாராள நன்கொடையாலும் எமக்கான நிதியை பெற்றுக் கொள்கிறோம்.
பொறுப்புள்ள தன்னார்வ பயண அனுபவங்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்ப சமூகங்களில் உள்ள வறுமையை நாங்கள் கையாண்டு வருகிறோம்
கட்டிக் கொடுக்க முடியாதவர்களுக்கு வீடு கட்டித் தர முயல்கிறோம், அது எங்களுக்கு சவாலாக உள்ளது.
தாயக மக்களுக்கு நல்ல தீர்வு கொடுங்கள், நம் உறவுகளுக்கு உதவ ஒற்றுமையும் வலிமையும் போதுமானது.
உங்கள் சிறிய நன்கொடைகள் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, எனவே தயவுசெய்து நன்கொடை அளித்து எங்களுக்கு உதவுங்கள்.