இங்கிலாந்து இலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி கேதீஸ்வரன் தம்பதிகளின் அன்புப் புதல்வன் சாய்சயன் அவர்களின் ஐந்தவது பிறந்தநாள் இன்றாகும். இன்றைய நன்நாளிலே தமது மகிழ்ச்சியை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு கற்றலுக்கான புத்தகப்பைகளையும் மதிய உணவையும் வழங்கிடுமாறு எம்மிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, தங்கபுரம் தோப்பூர் திருகோணமலையில் 30 மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகளுக்கு புத்தகப் பைகளையும் மதிய உணவையும் இன்று நாம் வழங்கி வைத்துள்ளோம்.