தலாவாக்கலை நுவரெலியாவில் பல தசாப்தங்களாக பேரின்னல்களுடன் வாழ்ந்துவரும் 20 குடும்பங்களுக்கு உலர் உணவை இன்று நாம் வழங்கி வைத்துள்ளோம். தலாவாக்கலையில் வாழ்ந்துவரும் மக்களை நேரிலே சென்று பார்வையிட்டு வந்த எமது பணியாளர் ஓருவரின் முயற்சியால், உதயம் தனது பணியை நுவரேலியாவிலும் ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
இச்செயற்திட்டத்துக்கு இரு நல்லுள்ளம் கொண்டோர் நிதியை வழங்கி வைத்துள்ளனர். அதில் அமரர் நடனசபாபதி அருந்தவராயா அவர்களின் (28.05.2024) 14வது ஆண்டை நினைவுகூரும் வகையில், யேர்மனி கம் நகரில் வாழ்ந்துவரும் அன்னாரது மனைவி பிள்ளைகள் 150யூரோக்களை வழங்கி வைத்துள்ளனர்.
அமரத்துவம் அடைந்த அமரர் நடனசபாபதி அருந்தவராயா அவர்களின் ஆத்ம சாந்திக்காக உதயம் தொண்டர்களும் வேண்டுவதோடு, நிதியை வழங்கிய குடும்பத்தார்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல சிரமங்களுக்கு மத்தியில்திட்டத்தை செயற்படுத்திய இராயேந்திரன் விவேக், யோகா இருவர்க்கும் உதயத்தின் பாராட்டு உரித்தாகட்டும். உறவுகளுக்கு உதவ விரும்புவோர் உதயத்தை தொடர்பு கொள்ளுங்கள்.