• 004915733957835

  • German Uthayam

avatar
தலாவாக்கலை நுவரேலியாவில் பல தசாப்தங்களாக பேரின்னல்களுடன் வாழ்ந்துவரும் 20 குடும்பங்களுக்கு உலர் உணவை இன்றைய நாள் வழங்கி வைத்துள்ளோம்.  தலாவாக்கலையில் வாழ்ந்துவரும் மக்களை நேரிலே சென்று பார்வையிட்டு வந்த எமது பணியாளர் ஒருவரது முயற்சியால் உதயம் தனது பணியை நுவரேலியாவிலும் ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
 
இச்செயற்திட்டத்துக்கு இரு நல்லுள்ளம் கொண்டோர் நிதியை வழங்கி வைத்துள்ளனர். அதில் 08.05.24 கொடிகாமம் வரணியைச்சேர்ந்த M. மிது அவர்களின் 29 வது அகவையை முன்னிட்டு, அவரை மகிழ்விக்கும் முகமாக யேர்மனி சோஸ்ற் நகரில் வாழ்ந்துவரும் அவரது சித்தி அவர்கள் 200யூரோக்களை வழங்கி வைத்துள்ளார்.
 
M. மிது அவர்கள் அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ உதயம் தொண்டர்களாகிய நாமும் வாழ்த்துகிறோம்.
மேலும் நிதியை வழங்கிய நல்லுள்ளத்துக்கும், பல சிரமங்களுக்கு மத்தியில் இத்திட்டத்தை செயற்படுத்திய இராயேந்திரன் விவேக், யோகா ஆகியோருக்கும் உதயத்தின் பாராட்டு உரித்தாகட்டும்.
உறவுகளுக்கு உதவ விரும்புவோர் உதயத்தை தொடர்பு கொள்ளுங்கள்